ஈரோட்டில் ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் பகல் நேரம் முழுவதும் சட்டவிரோத மது விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பாகவே பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் கூடுதல் விலைக்கு மதுபட்டில்கள் விற்பனை தொடர்ந்து அரங்கேறி வருவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.