ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பனையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வீட்டில் வைத்து கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படும் சிசிடிவி காட்சி வெளியானது. பனையம்பள்ளி பகுதியில் இருந்து பருசபாளையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு மது பாட்டில்களை சாக்குப்பைகளில் வாங்கி வரும் இளைஞர்கள் அதை கள்ளத்தனமாக விற்பனை செய்து வருகின்றனர்.