மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரத்தை தட்டிக்கேட்ட இளைஞர்கள் இருவர், கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டனர். முட்டம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் குடும்பத்துடன் சட்டவிரோதமாக சாராயம் விற்பதாக கூறப்பட்ட நிலையில், அதனை தட்டிக் கேட்ட இளைஞர்கள் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தியை, சாராய வியாபாரிகள் கொலை செய்துள்ளனர்.