கோவை மாவட்டத்தில் 190 அரசு மதுபான கடை பார்கள், அரசிற்கு பணம் செலுத்தாமல் சட்டவிரோதமாக செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு பார் செயல்படுவதற்கு இரண்டு மாத கட்டணம் முன் பணமாக செலுத்த வேண்டும் எனவும், இரண்டு மாதத்திற்கு மேல் பணம் செலுத்தாமல் உள்ள பார்களுக்கு சீல் வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.