திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருப்பாம்புரம் ராகு கேது கோவிலில், இசையமைப்பாளர் இளையராஜா சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக திருக்கோவில் நிர்வாகம் சார்பில் இளையராஜாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலுக்குள் நடந்து சென்ற போது திடீரென பெண் ஒருவர், இளையராஜாவின் கால்களில் விழுந்து ஆசி வாங்கினார். அதே போல் கோவில் ஊழியர்களும், ரசிகர்கள் பலரும் கூட்டமாக நின்று இளையராஜாவுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.