திருப்பூர் மாவட்டம் வடுகபாளையத்தில் கலசத்தில் தங்கசங்கிலி வைத்து வழிபாட்டால் செல்வம் பெருகும் என கூறி, இரு மூதாட்டிகளிடம் 12 சவரன் தங்கச் சங்கிலி மோசடி செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். தண்டுக்காரர் தோட்டத்தில் வசித்து வந்த வள்ளியம்மாள், அவரது தங்கை பூவாத்தாள் ஆகிய இருவரிடம் சிவசந்திரன் என்பவர் தங்க சங்கிலி பெற்று மோசடி செய்தார்.