மதுரையில் நகை கடை உரிமையாளர் நகைகளை எடுத்துச் சென்று தலைமறைவாகிவிட்டதாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் புகார் அளித்தனர். மனோஜ் ஜுவல்லர்ஸ் நடத்தி வந்த பூபதி மற்றும் ராஜசேகரன் பழையை நகையை கொடுத்தால் புது நகை தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக வாடிக்கையாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.