கலைஞர் கருணாநிதியின் பேரன் என்பதை தவிர துணை முதல்வரான உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளதென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார். கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிறப்பினால் ஒருவர் உயர் பதவிக்கு வர முடியுமென்றால் அதுதான் மிகப்பெரிய சனாதனம் என திமுகவை விமர்சித்தார்.