சட்டமன்ற தேர்தலின் போது திமுக நிர்வாகிகள் மீது புகார் எழும் பட்சத்தில் அவர்களை உடனடியாக கட்சியில் இருந்து நீக்குவேன் என்று அமைச்சர் துரைமுருகன் பேசியது அங்கிருந்த நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராணிப்பேட்டை மாவட்டம் அக்ராவரம் பகுதியில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார்.