பொங்கல் தொகுப்புக்கான கரும்புக் கொள்முதலில் இடைத்தரகர்கள் பற்றி புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். அரசின் பொங்கல் தொகுப்பு விற்பனையை கடலூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தவர், பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் கரும்பை விவசாயிகளிடம் இருந்து அரசே நேரடியாக கொள்முதல் செய்வதாக கூறினார்.