மோனிக்கு மாமூல் இல்லைன்னா கடையில் போனி ஆகாது என, மது போதையில் கத்தியை சுழற்றி பணம் கேட்டு மிரட்டிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர். சென்னை கொடுங்கையூர் அருகே எருக்கஞ்சேரி ஜி.என்.டி. சாலையில் ஹார்டுவேர் கடை நடத்தி வரும் இத்திஸ் முகமது கடைக்கு கத்தியுடன் சென்ற பெண், தாம் ரபீக் என்கிற ரவுடியின் மனைவி மோனிகா எனவும், தமது கணவர் சிறையில் இருப்பதால் தாம் மாமூல் கேட்டு வந்திருப்பதாகவும் கூறி அடிக்கடி பணம் கேட்டு மிரட்டினார். இது தொடர்பான புகாரின் அடிப்படையில், கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆராய்ந்து நடவடிக்கை எடுத்தனர்.