மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை எதிர்ப்பதை மட்டுமே மாநில அரசு கொள்கையாக வைத்திருந்தால் இந்தியா எப்படி ஒற்றுமையாக இருக்கும் என நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பினார். பெரம்பலூர் மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற சமத்துவ விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வருதை தந்த அவர் செய்தியாளர்களிடம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை தலைவிரித்து ஆடுவதாக குற்றம்சாட்டினார். மேலும், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தவறான தகவலை மாநில அரசு பரப்பி வருவதாகவும், இந்தியை யாரும் திணிக்கவில்லை, கற்றுக் கொள்ளும்படிதான் சொல்வதாகவும் கூறினார்.