எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டால், ஓ.பி.எஸ் எங்கும் நடமாட முடியாத அளவிற்கு அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார். மதுரை கே.கே.நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தாம் ஓ.பி.எஸ் குறித்து பேசியதை இ.பி.எஸ் குறித்து பேசியதாக சமூக வலைதளத்தில் திரித்து வெளியிடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.