திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனபாக்கியம் நகைக் கடையில் தொடர்ந்து மூன்று நாளாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை முடிவடைந்தது. தாராபுரம் சாலையில் குழந்தைவேல் - முருகன் சகோதரர்களுக்கு சொந்தமான தனபாக்கியம் ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை உள்ளது. இந்த கடையில் வரி ஏய்ப்பு நடந்ததாக வந்த புகாரை தொடர்ந்து, ஐடி ரெய்டு நடைபெற்றது.