விசிக தலைவர் திருமாவளவன் தரம் தாழ்ந்து பேசுவார் என தான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார். சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் பாஜக உறுப்பினர்கள் சர்க்கை முகாமில் பங்கேற்ற அவர், அண்ணன் திருமாவளவன் அரசியல் களத்தில் இதுவரை பேசிய உரையில், உளுந்தூர்பேட்டை மாநாட்டில் பேசிய பேச்சு அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளி என்று கூறினார். மேலும், அரசியல் வாழ்வில் இதுவரை தனிநபர் தாக்குதல் தான் நடத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.