அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டாலும், தற்போதும் கட்சி நிர்வாகிகள் பலருடன் பேசி வருவதாக, செங்கோட்டையன் கூறி உள்ளார். கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:தேர்தல் ஆணையத்திடம் கூறி இருப்பது குறித்து நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். எனது அடுத்த கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள். நல்லதே நடக்கும்.தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த கடிதத்தில் 250 பக்கம் இருக்கிறது, அதை வெளியில் சொல்ல முடியாது, அதில் முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்து இருப்பதை வெளியில் சொல்லக்கூடாது என விதி இருக்கிறது.53 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன், என்னை தனிப்பட்ட முறையில் யாரும்(பாஜக) இயக்க முடியாதுமனோஜ் பாண்டியன் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்திருப்பது அவருடைய விருப்பம்அதிமுகவில், மகன் தலையிடுகின்றார், மைத்துனர் தலையிடுகின்றார். மாவட்டத்தில், தொகுதிக்குள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறனர். கட்சியில் மருமகன் தலையீடும் இருக்கிறது. அதனால் அதைப் பற்றிச் சொன்னேன். இது மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறாக இருக்கும்.அதிமுக தரப்பிலிருந்து யார் யார் பேசுகின்றனர் என்பது அவர்களுக்கும் எனக்கும் தான் தெரியும். அதை வெளிப்படுத்தினால் அவர்களுக்கும் ஆபத்து இருக்கிறது. பேச்சுவார்த்தை நடப்பது உண்மை தான். இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார். இதையும் பாருங்கள் - 250 பக்கம், எல்லாமே சீக்ரெட் - பேரிடி கொடுத்த செங்கோட்டையன் | Sengottaiyan latest speech | ADMK