கடலூர் மாவட்டம் அங்குச்செட்டிபாளையம் பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படாததால் மனஉளைச்சலில் இருந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரியும், காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்துள்ளார். மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், அண்ணாமலை என்பவர் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.