தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஹோமியோபதி மருத்துவர் அளித்த சிகிச்சையில் தனது கணவர் உயிரிழந்ததாக மனைவி புகார் தெரிவித்துள்ளார். சலூன் கடை வைத்து நடத்திய கோவிந்தராஜ் என்பவருக்கு கிருஷ்ணசாமி என்பவர் சிகிச்சை அளித்த போது உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், கிருஷ்ணசாமி தலைமறைவானார்.