கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த பூவரசன், வேப்பூரில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றபோது, சர்வீஸ் சாலையில் கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டரை முந்திச் செல்ல முயன்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.