சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் மனைவி பிரிந்து சென்றதால் மன உளைச்சலுக்கு ஆளான கணவர், வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகரை சேர்ந்த மகேஷ் என்பவரது மனைவிக்கு வேறொருவருடன் தகாத உறவு இருந்ததாகவும், அதனை தட்டிக் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் மனைவி பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மகேஷ், வாட்ஸ்ஆப்பில் சோகமான ஸ்டேட்டஸ்களை வைத்து விட்டு, துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனிடையே மகேஷின் தற்கொலைக்கு காரணமான அவரது மனைவியையும், அவருடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படும் நபரையும் கைது செய்யக் கோரி உறவினர்கள் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.