நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நடத்தையில் சந்தேகமடைந்து தகராறு செய்த கணவனை தின்னர் ஊற்றி எரித்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கூடலூர் கிளையில் ஓட்டுநராக பணியாற்றி வந்த முரளி என்பவரின் மனைவி விமலாராணி, அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மனைவியை கண்காணித்த முரளி, அவர் வேறு ஒருவருடன் பழகி வந்ததை கண்டறிந்து தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த விமலாராணி, தின்னரை முரளி மீது ஊற்றி தீ வைத்ததில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் போது முரளி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விமலாராணியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.