ராசிபுரம் அருகே திருமணமாகி 2 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல் மாவட்டம் சிங்கிலியன்கோம்பை பகுதியை சேர்ந்த ரேஷன் கடை பணியாளர் அன்பரசனுக்கும் அவரது மனைவி சசிகலாவுக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இந்நிலையில் மனைவியின் ஊரான சந்திரசேகரபுரம் பகுதிக்கு சாமி கும்பிட வந்த அன்பரசனிடம் குழந்தை இல்லாதது குறித்து உறவினர்கள் விசாரித்ததாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த அன்பரசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.