தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், மனைவியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்றதாக, நீதிமன்றத்தில் சரணடைந்த கணவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். செவல்விளை கிராமத்தை சேர்ந்த முருகன், தனது மனைவி செல்வியை கொலை செய்ததாக, நீதிமன்றத்தில் சரணடைந்தார். செல்போனில் வேறொரு நபருடன் அடிக்கடி பேசி வந்ததால், சந்தேகப்பட்டு மனைவியை கொன்றதாக தெரிவித்துள்ளார்.