விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மதுபோதையில் மனைவியை கல்லால் அடித்துக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். முருகன்தாங்கல் பகுதியை சேர்ந்த 25 வயதான தங்கராஜ், கணவரை இழந்த 35 வயது பெண்ணான சின்னப்பொண்ணு என்பவரை மறுமணம் செய்தார். நேற்றிரவு மதுபோதை தலைக்கேறிய தங்கராஜ், சின்னபொண்ணுவிடம் தகராறு செய்து கல்லால் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சின்னப்பொண்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.