திருப்பத்தூர் மாவட்டம் பச்சூரில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் கணவன் மனைவியை தாக்கிவிட்டு 8 சவரன் தாலிச்செயினை பறித்து சென்றனர். கட்டுமான பொருட்கள் விநியோக தொழிலை செய்து வரும் சிவக்குமார், அவரது மனைவி வாணி ஆகியோர் தூங்கி கொண்டிருந்த போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கைவரிசையை காட்டினர்.