குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே பிரிந்து வாழும் மனைவி சென்ற காரை, தனது காரில் துரத்திச் சென்று இடித்து கொலை மிரட்டல் விடுத்த கணவன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். குளச்சலை சேர்ந்த முகமது அப்துல் காதரும் அவரது மனைவி சரபு நிஷாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதில் சரபு நிஷா தனது சகோதரருடன் சென்னையில் வாழ்ந்து வந்த நிலையில், மணவாளக்குறிச்சியில் உள்ள கல்லூரியில் படிக்கும் தனது மகளை, சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்க்க மாற்றுச் சான்றிதழ் வாங்க காரில் சென்றுள்ளார். மகளை சென்னையில் உள்ள கல்லூரிக்கு மாற்றுவதை அறிந்த கணவர் அடியாட்களுடன் காரில் சென்று மிரட்டியுள்ளார்.இதையும் படியுங்கள்: அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து... சாலையோரம் நின்றிருந்த பெண்கள் மீது மோதிய கார்