திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடி அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன் - மனைவி மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கருப்பையா- பாப்பாத்தி தம்பதி, உறவினர் வீட்டில் இருந்து திரும்பி வந்துக் கொண்டிருந்த போது, தளி மேம்பாலத்தின் தடுப்புச்சுவரில் இருசக்கரவாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.