திருவள்ளூரில் ஒரே கயிற்றில் தூக்கிட்டு கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் செல்வராஜ்-இந்திரா தம்பதி வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஒராண்டிற்கும் மேலாக குடல் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த செல்வராஜ் மன வேதனையால் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்து, அதை மனைவியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செல்வராஜ், இந்திரா ஆகிய இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.