சென்னை சோழிங்கநல்லூர் அருகே, மழைநீர் வடிகால் கால்வாயில் மனிதர்களை இறக்கி விட்டு கழிவுகளை அகற்றும் அவலம் நடந்துள்ளது. சோழிங்கநல்லூர் - மேடவாக்கம் செல்லும் செம்மொழி சாலையில் உள்ள இந்த கால்வாயில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வெற்று உடலுடன் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்தனர். மனிதக் கழிவுகளை மனிதர்களை கொண்டு அள்ளக் கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவு உள்ள நிலையில், ஜேசிபி மற்றும் பொக்லைன் மூலம் அகற்ற வேண்டிய சாக்கடைக் கழிவுகளை மாநகராட்சி அதிகாரிகள் மனிதர்களை கொண்டு அகற்றினர்.