திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காங்கேயம் சாலையில் உள்ள தனியார் கேக் ஷாப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரியில் இருந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் பன் வாங்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. வீட்டிற்கு சென்று பன்னை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்க முயன்ற போது, அதில் மனித பல் இருந்ததால் ஆத்திரமடைந்த அவர் நேரடியாக பன் தயாரிக்கும் இடத்திற்கு சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.