உலக கண்பார்வை தினத்தை முன்னிட்டு, விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனையின் ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில் மனித சங்கிலி மற்றும் விழுப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஹெல்த் சயின்ஸ் துறையின் கண் ஒளியியல் பிரிவு மாணவர்கள், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 4 ரோடு பகுதி வரை மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும், கண் பார்வையை பாதுகாப்பதன் அவசியம் குறித்து, மாணவர்கள் நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்வில், துறை பேராசிரியர் டாக்டர் செந்தில் குமார் ,பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கணேசன், சேலம் மாநகர துணை மேயர் சாரதாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.