விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் விதமாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தீயணைப்புத் துறையினர் செயல்விளக்கம் அளித்தனர். தனியார் பள்ளியில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில், திடீரென பட்டாசு விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.