அதிமுக-வினர் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூரில் அதிகாரிகள் துணையுடன் மணல் கொள்ளை நடப்பதாக குற்றம் சாட்டினார். காவிரி ஆற்றுப்படுகையில் ஒரு நாளைக்கு சுமார் 200 லாரிகளில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாகவும், ஆனால் எந்தவொரு அதிகாரியும் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் கூறினார்.