மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் விரும்பும் இடங்களில் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் முழுமானியத்துடன் வீடு கட்டித்தரப்படும் என அமைச்சர் நேரு உறுதி அளித்தார். நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நீதிமன்ற உத்தரவின்படி மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.