கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கிவரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை 3051 கோடி ரூபாய் முதலீட்டில் ஏற்கனவே செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 3699 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது தினசரி 92 ஆயிரம் மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், தினசரி 2 லட்சம் மொபைல் போன்களை உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தொழிற்சாலை மூலம் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்நிலையில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.