புதுக்கோட்டை ஆலங்குடி அருகே நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில், பார்வைத்திறன் குறைபாடுள்ள குதிரை 2-ஆவது பரிசு பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வம்பன் வீரமாகாளி அம்மன் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பந்தயத்தில் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரை சேர்ந்த விநாயகம் - திவ்யா தம்பதியின் பார்வை குறைபாடுள்ள எம்ஜிஆர் என்கிற குதிரை பங்கேற்று வெற்றிபெற்றது.