விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கல்லூரி மாணவர்கள் 13 பேர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. கோனேரிக்குப்பத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரி கட்டடம் ஒன்றில் தேனீக்கள் கூடு கட்டி இருந்தது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை கல்லூரிக்கு வந்த வீரர்கள், கெமிக்கல் ஸ்பிரே அடித்து அழித்தனர். இந்த சூழலில், விடுதி மாணவர்கள் சிலர், கீழே விழுந்து கிடந்த தேன் அடையை எடுத்து சாப்பிட்டதால், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.இதையும் படியுங்கள் : நியாயவிலைக் கடையில் இருந்து 40 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல்.... கடத்தல் வேனை விரட்டிப் பிடித்து வீடியோ எடுத்த இளைஞர்கள்