விழுப்புரம் மாவட்டம் வாணியம்பாளையத்தில் தேனீக்கள் தாக்கி 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் இசைக்கலைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சஞ்சீவி ராயர் கோயில் குளக்கரை பகுதியில் நடைபெற்ற பூணூல் அணியும் நிகழ்ச்சியின் போது, அங்கு மரத்திலிருந்த தேனீக்கள் திடீரென பறந்து அங்கிருந்தவர்களை தாக்கின. இதில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த கோபு என்பவர் உயிரிழந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.