வீட்டுக்குள் புகுந்த ஏழு அடி நீளமுள்ள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து தீயணைப்பு துறையினர் பாராட்டை பெற்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குட்பட்ட விகேஎஸ் நகர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் வீட்டில் சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி அந்த பாம்பை பிடித்தனர். சாக்குப் பையில் பாம்பை போட்டு அருகே உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.