திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே நில தகராறு காரணமாக வீடு புகுந்து இரு பெண்களை, கும்பல் ஒன்று ஆயுதங்களால் கடுமையாக தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. கழிவுசெட்டிபட்டியை சேர்ந்த லதாவிற்கும், அவரது உறவினரான மேகநாதன் என்பவருக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு உள்ளது. இந்த நிலையில், மேகநாதன் உள்ளிட்ட 5 பேர் கும்பல் லதாவின் வீட்டிற்கு சென்று இரும்பு கம்பியால் வீட்டை அடித்து நொறுக்கியும், லதாவையும் அவரது தங்கையும் கடுமையாக தாக்கியது.