தஞ்சாவூரில், கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மேள, தாளத்துடன் யானை மீது வைத்து புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. திருவையாறு அடுத்த கள்ளபெரம்பூரில் சியாமளாதேவி என்கிற காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில், சுற்றுவட்டார கிராம மக்களின் குலதெய்வமாக விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில், வரும் 14ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் ஊர்வலம் நடைபெற்றது. மேள, தாளத்துடன் யானை மீது புனித நீர் வைத்து முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வரப்பட்டன. அப்போது, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.