சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகரில் உள்ள புனித ஆரோக்ய அன்னை பேராலய திருவிழாவை முன்னிட்டு, திருத்தேர் பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித ஆரோக்ய அன்னை வைக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.