தமிழகத்தில் இந்து - இஸ்லாமியர் இடையேயான மத நல்லிணக்கம் சிறப்பாக இருப்பதாக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தெரிவித்துள்ளார். சென்னை, ராயப்பேட்டையில் வழக்கறிஞர்கள் மீலாது அமைப்பு சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் எஸ்-எஸ்.சுந்தர், எம்.எஸ்.ரமேஷ், மற்றும் ஏ.ஏ. நக்கீரன், ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.என் பாஷா, அக்பர் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.