திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே விவசாய நிலத்தில் அத்துமீறி நுழைந்து வீட்டை இடித்ததாக கூறி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை சிறைப்பிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முள்ளிபுரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்திற்கு சொந்தமான நிலத்தை விவசாயிகள் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, அதனை மீட்பதற்கு அதிகாரிகள் சென்றதாக கூறப்படுகிறது.