தென்காசி மாவட்டம் கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை ஜேசிபி உதவியுடன் நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்ததால் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த மாதமே உத்தரவிடப்பட்டது. ஆனால் கால அவகாசம் கொடுத்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு நெடுஞ்சாலை துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.