கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி அலுவலகம் எதிரில், உயர் மின்னழுத்த மின் கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. அந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயத்தில் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றக்கோரி புகாரளித்தும் இதுவரை மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.