கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே மின்கம்பத்தின் மீது கார் மோதியதில் ஏற்பட்ட மின்னழுத்தம் காரணமாக, வீடுகளில் இருந்த மின்மீட்டர்கள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. சூளகிரியில் இருந்து உத்தனப்பள்ளி செல்லும் சாலையில்உள்ள மின்கம்பத்தின் மீது கார் மோதியது. இதனால், மின்னழுத்தம் ஏற்பட்டு வீடுகளில் உள்ள மின்மீட்டர்கள், சுவிட்ச் பாக்ஸ் மற்றும் மின்சாதன பொருட்கள் எரிந்து தீக்கிரையாகின.