மதுரை விமான நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து விமான மூலம் கடத்தி வரப்பட்ட 8 கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு சென்னையை சேர்ந்த நபர் உள்பட இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தாய்லாந்தில் இருந்து மதுரைக்கு சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த சாகுல் ஹமீது மற்றும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த காதர்மைதீன் ஆகிய இருவரையும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் இருவரும் தங்களது உடைமைகளில் மறைத்து வைத்து 8 கிலோ எடையிலான ஹைட்ரோபோனிக் கஞ்சாவை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.