சினிமா படப்பிடிப்பின் போது நடிகரை காளை மாடு முட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் அஞ்சுகுளிப்பட்டி கிராமத்தில் 'வட மஞ்சுவிரட்டு' படப்பிடிப்பின்போது கதாநாயகன் 'முருகா' அஷோக்கை காளை மாடு முட்டியதில் அவருக்கு வயிற்றுப்பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் நடிகர் அஷோக் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.