புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 'மிஷன் ஜீரோ ஃபேடலிட்டி'யின் கீழ் வருகின்ற 12ஆம் தேதி முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.